தமிழ்நாடு செய்திகள்

மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை

Published On 2023-01-09 09:36 IST   |   Update On 2023-01-09 11:19:00 IST
2023-01-09 05:08 GMT

2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.28 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. 

2023-01-09 05:05 GMT

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழக அரசு விளங்குகிறது

2023-01-09 05:05 GMT

தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

2023-01-09 05:03 GMT

குறைந்த கால நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது

2023-01-09 05:01 GMT

கிராமப்புற பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2023-01-09 05:01 GMT

நதிநீர் பங்கீடு விவகாரங்களை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது: ஆளுநர்

2023-01-09 04:59 GMT

நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது.

2023-01-09 04:58 GMT

மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது- ஆளுநர்

2023-01-09 04:57 GMT

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி உள்ளது - ஆளுநர்

2023-01-09 04:37 GMT

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என தமிழில் கூறி, ஆளுநர் தனது உரையை தொடங்கினார்

Similar News