தமிழ்நாடு
null

மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை

Published On 2023-01-09 04:06 GMT   |   Update On 2023-01-09 05:49 GMT

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரை நிறைவடைந்ததும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். நாளை சட்டசபை மீண்டும் கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். 

2023-01-09 05:49 GMT

ஆளுநர் தனது உரையின்போது திராவிட மாடல் ஆட்சி என்ற வாக்கியத்தை தவிர்த்தார். ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி என்று இருந்த நிலையில், உரையாற்றும்போது அதனை பேசாமல் தவிர்த்துள்ளார். 2 மற்றும் 3 பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்தார்.

2023-01-09 05:26 GMT

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை நிறைவடைந்தது. 50 நிமிடம் அவர் உரையாற்றினார்.

2023-01-09 05:24 GMT

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக உள்ளது- ஆளுநர் ஆர்.என்.ரவி

2023-01-09 05:19 GMT

கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 158 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 34 கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 

2023-01-09 05:18 GMT

விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2023-01-09 05:14 GMT

ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

2023-01-09 05:13 GMT

மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.

2023-01-09 05:10 GMT

149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன -ஆளுநர்

2023-01-09 05:10 GMT

கடந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் 4 ஆண்டுகள் என திட்டமிடப்பட்ட நிலையில், முன்கூட்டியே முடியும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. 

2023-01-09 05:09 GMT

பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு தொடங்கி உள்ளது.

Similar News