தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Update: 2022-09-30 08:41 GMT
  • வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
  • அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை.

சென்னை:

தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 22-ந் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வக்கீல், மத நல்லிணக்கம், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை சம்பந்தப்பட்டுள்ளதால் மறுஆய்வு கோர உரிமை உள்ளது. அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு எடுத்தது உகந்ததல்ல. அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News