தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்கள் திரண்டு போராட்டம்

Published On 2023-07-28 10:00 GMT   |   Update On 2023-07-28 10:01 GMT
  • பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் திரண்ட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
  • ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

சென்னை:

ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று சென்னையில் ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் திரண்ட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை- ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோஷங்களை ஆசிரியர்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆசிரியர்கள் இன்று காலையில் இருந்தே வர தொடங்கினர். இதனால் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News