தமிழ்நாடு செய்திகள்

அண்டர்காடு அரசு உதவிபெறும் பள்ளியில் தொழிலாளர்களோடு சேர்ந்து பள்ளி ஆசிரியர் தூய்மை பணியில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

அரசு பள்ளியில் தொழிலாளர்களுடன் சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்ட ஆசிரியர்

Published On 2023-06-03 10:42 IST   |   Update On 2023-06-03 10:42:00 IST
  • பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வசந்தா பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வேதாரண்யம்:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. அதனால் பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் வசந்தா என்பவர் தொழிலாளர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையல் கூடம் என பள்ளியின் அனைத்து பகுதியிலும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வசந்தா பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆசிரியரை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News