தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.-வுக்கு கட்டமைப்பு பலமாக உள்ளது

Published On 2023-12-16 14:15 IST   |   Update On 2023-12-16 15:01:00 IST
  • அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அ.தி.மு.க.வை விட அதிகமாக பேசி வருகிறோம்.
  • மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனக்கு நெருக்கமானவர்களிடம் யதார்த்தமான சில உண்மைகளையும் எடுத்து சொல்லி இருக்கிறார்.

அதாவது தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அதிகமாக பேசினோம். ஆனால் அதன் பலனை பலமான கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அறுவடை செய்துவிட்டது. அதேபோல் தி.மு.க.வின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அ.தி.மு.க.வை விட அதிகமாக பேசி வருகிறோம். இங்கும் தி.மு.க.-வுக்கு கட்டமைப்பு பலமாக உள்ளது. எனவே அ.தி.மு.க. அறுவடை செய்துவிட கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News