தமிழ்நாடு செய்திகள்

தீபாவளியை கொண்டாடிய கிராம மக்களை படத்தில் காணலாம்.


தீபாவளியை 15 நாளுக்கு பின்பு கொண்டாடிய கிராம மக்கள்

Published On 2022-11-08 10:50 IST   |   Update On 2022-11-08 10:50:00 IST
  • கடந்த சில வாரங்களாக இவர்கள் வளர்த்து வந்த மாடுகளுக்கு அம்மை நோய் வந்து 5 மாடுகள் இறந்தது.
  • வருடத்தில் ஒரு முறை விமர்சையாக கொண்டாடும் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் நிறுத்தி வைத்தனர்.

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சென்னப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த மேடுபள்ளி கிராமத்தில் 150-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் குரும்பர் இன மக்கள் என்பதால் அதிக அளவு கால் நடைகள் வளர்ப்பதும், தோட்டங்களில் பயிர் செய்வதும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.

இவர்கள் கால்நடைகள் என்றால் உயிராக நினைப்பர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இவர்கள் வளர்த்து வந்த மாடுகளுக்கு அம்மை நோய் வந்து 5 மாடுகள் இறந்தது.

இதனால் வருடத்தில் ஒரு முறை விமர்சையாக கொண்டாடும் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் நிறுத்தி வைத்தனர்.

தற்போது 15 நாள் கழித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Similar News