தமிழ்நாடு

சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரி கிராம கோவில் பூசாரிகள் உண்ணாவிரதம்- அறங்காவலர் கோபால்ஜி பங்கேற்பு

Update: 2023-03-20 09:25 GMT
  • பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
  • போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பூசாரிகள் மற்றும் அருள் வாக்கு கூறுவோர் கலந்து கொண்டனர்.

சென்னை:

கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் கோரிக்கையை ஏற்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பூசாரிகளுக்கு ரூ. 2000 சம்பளம் வழங்கப்படும் என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும். கிராம கோவில்களுக்கு கட்டணம் இல்லா மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் மறைவுக்குப் பின் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பூசாரிகள் மற்றும் அருள் வாக்கு கூறுவோர் கலந்து கொண்டனர்.

வள்ளுவர் கோட்டம் அருகே கிராம கோவில் பூசாரிகள் பேரவை நடத்திய போராட்டத்தில் பேரவையின் அறங்காவலரும், விஷ்வ இந்து பரிஷத் மாநில தலைவருமான கோபால் ஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த போராட்டத்தில் பூசாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News