தமிழ்நாடு

பா.ஜ.க. சிக்னலுக்காக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கமலாலயத்தில் காத்துகிடக்கிறார்கள்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2023-01-27 07:48 GMT   |   Update On 2023-01-27 07:48 GMT
  • சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் தான் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து இருக்கிறோம்.
  • நான் தொடர்ந்து திருமண விழாக்களில் மணமக்கள் எப்படி இருக்க கூடாது என்று சொல்வேன். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மாதிரி இருந்து விடாதீர்கள்.

சேலம்:

சேலம் நடுவனேரியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நான் வரும் வழியில் எல்லாம் எனக்கு மிக எழுச்சியோடு உணர்வு பூர்வமாக வரவேற்பு அளித்த சேலம் மாவட்ட தி.மு.க.வினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறன்.

சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் தான் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து இருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரபோகிறது. அதற்கு அமைச்சர் நேரு தான் அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடி தருவார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் சேர்ந்து மிகப்பெரிய வெற்றியை தேடி தருவீர்கள் என நம்புகிறேன்.

நான் தொடர்ந்து திருமண விழாக்களில் மணமக்கள் எப்படி இருக்க கூடாது என்று சொல்வேன். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மாதிரி இருந்து விடாதீர்கள். பக்கத்தில் பக்கத்தில் சட்டபேரவையில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு நான் சாட்சி. கண்கூடாக பார்த்து இருக்கிறேன். ஆனால், ஒருத்தர் ஒருத்தர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பேசிக்கொள்ள மாட்டார்கள். பிரதமர் மோடிக்கு யார் மிகபெரிய அடிமை என்கிற போட்டியோ நடக்கும். ஆட்சியில் இருந்தவரைக்கும் அவர்கள் 2 பேருக்குள்ளேயும் எந்த பிரச்சினையும் இல்லை. இப்போது ஆட்சி இல்லை என்றவுடனே நீயா, நானா? என பிரச்சினை நிலவுகிறது.

சட்டமன்றத்தில் நான் பேசியபோது, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவர்களே 2 பேரும் என்னுடைய காரை தவறுதலாக எடுக்க போயிவிட்டீங்க. தயவு செய்து எடுத்துக்கொண்டு போங்க. ஆனால் ஒன்றே ஒன்று கமலாலயம் மட்டும் போயிடாதீங்க என்று சொன்னேன். அப்போது அண்ணன் எடப்பாடி பழனிசாமி மட்டும் பேசவே இல்லை. அதற்கான அர்த்தம் இப்போது தான் தெரிகிறது.

அண்ணன் ஓ.பி.எஸ். மட்டும் எழுந்து என்னுடைய கார் எந்த காலத்திலும் கமலாலயம் செல்லாது என்று கூறினார். இப்போது 2 பேரும் போட்டிபோட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள். பா.ஜ.க. சிக்னல் கிடைக்கிறதுக்கு. அவர்களுடைய எஜமானார் மோடி.

இவ்வாறு அவர் பேசினார்

Tags:    

Similar News