தமிழ்நாடு

மின்வாரிய வேலைக்கு ரூ.7½ லட்சம் வாங்கி குப்பை அள்ளும் வேலையில் சேர்த்து விட்டவர் அதிரடி கைது

Published On 2022-12-04 10:23 GMT   |   Update On 2022-12-04 10:23 GMT
  • வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் ஒரு கட்டிடத்தைகாட்டி இங்கு தான் வேலை என்று கூறினார்.
  • வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி சதீசை கைது செய்தனர்.

சென்னை:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் வேளச்சேரி போலீசில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-

எங்கள் ஊரை சேர்ந்த விஸ்வா என்பவர் மூலமாக வேளச்சேரி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சதீஷ் அறிமுகமானார். எனது மனைவி பூவிழிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சதீஷ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் வாங்கினார்.

பின்னர் வேலை வாங்கி தராததால் அதுபற்றி கேட்ட போது, மின் வாரியத்தில் எனக்கு வேலை வாங்கி தருகிறேன். மனைவிக்கு வேலை கிடைக்காது என்று கூறினார்.

இதைநம்பி தான் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் பணம் கொடுத்தேன். இந்த பணத்தையும் வாங்கி கொண்டு சென்னைக்கு வருவதாக அடையாள அட்டை ஒன்றை கொடுத்தார். வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் ஒரு கட்டிடத்தைகாட்டி இங்கு தான் வேலை என்று கூறினார்.

அங்கு சென்று பார்த்த போது எனக்கு தற்காலிகமாக குப்பை அள்ளும் வேலையை வாங்கி கொடுத்து அவர் மோசடி செய்தது தெரியவந்தது.

எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி சதீசை கைது செய்தனர்.

Similar News