தேவர்சோலையில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து
- நீலகிரி மாவட்டம் கூடலூா் தேவா்சோலை சாலையில் பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடலூா் போலீசார் விசாரித்து வருகின்றனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூா் தேவா்சோலை சாலையில் பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கடையின் தரைத்தளத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவ தொடங்கியது. இதில், கடையில் இருந்த பொருள்கள் வெடித்து சிதறின. தீ விபத்தை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக ஒடி வந்து தீயணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அந்த சமயம் கடையில் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக கூடலூரில் இருந்து கேரளா மாா்க்கமாக செல்லும் போக்குவரத்து சுமாா் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடலூா் போலீசார் விசாரித்து வருகின்றனா்.