தமிழ்நாடு செய்திகள்
தமிழக சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு
- சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
- இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கூடியது.
இந்த கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதில், மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, க.நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஒளவை நடராஜனுக்கு இரங்கல் தீர்மானம், ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து ஜாம்பவான் பீலே ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதன்பிறகு, மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.