தமிழ்நாடு செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-11-29 14:08 IST   |   Update On 2022-11-29 14:08:00 IST
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை அறிவிப்பு.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக sdat@tn.gov.in என்கிற இணைய்தள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News