தமிழ்நாடு செய்திகள்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 24-ந்தேதி முதல் காலியாக உள்ளது: சபாநாயகரின் அறிவிப்பு அரசிதழில் வெளியீடு

Published On 2024-02-28 11:41 IST   |   Update On 2024-02-28 11:41:00 IST
  • விஜயதாரணி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
  • பாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை:

விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 190 (3) (பி)ன் கீழ் சட்டப்பேரவை விதிகளின்படி பிப்ரவரி 24 முதல் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 'திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருக்கிறதா என சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். இந்த ஆட்சி சட்டத்தின் ஆட்சி. சட்டத்திற்குட்பட்டு சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.

Tags:    

Similar News