தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தார் சீமான்

Published On 2023-01-29 18:50 IST   |   Update On 2023-01-29 18:50:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி.
  • கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

தேர்தல் தொடர்பாக கடந்த 22ம் தேதி அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுகிறார் என்றும், ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. அதில் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம் என்றும் கூறினார்.

இந்நிலையில், ஈரோடில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

மேலும் அவர், கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News