திருக்கோவிலின் அருகே பரளி ஆற்று தரைப்பாலத்தை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து அதற்கான வேலைகள் துவங்கி வைக்கப்பட்டது.
- எனது தந்தையின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது ஞாபகமாக இன்று அந்த தரைப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
பரளி ஆற்று தரைப்பாலத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலின் அருகே பரளி ஆற்றை கடப்பதற்கு தரைப்பாலம் அமைக்க வேண்டுமென்ற ஊர்மக்களின் கோரிக்கையை ஏற்று தரைப்பாலம் அமைத்து தரப்படும் என எனது தந்தையும் கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தெய்வத்திரு திரு H.வசந்தகுமார் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.
நான் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படட பின்னர் இந்த தரைப்பாலம் அமைப்பதற்கு 75 லட்சம் ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து அதற்கான வேலைகள் துவங்கி வைக்கப்பட்டது.
வேலைகள் முடிந்தபின் எனது தந்தையின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது ஞாபகமாக இன்று அந்த தரைப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.