தமிழ்நாடு
சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை..
- தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்கிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருந்தது.
அதன்படி சென்னை, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக நகர் முழுக்க குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. காலை முதலே வெப்பம் வாட்டிய நிலையில், திடீர் மழை நகரை குளிர்வித்துள்ளது.