தமிழ்நாடு செய்திகள்
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் இன்று திறப்பு- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்தும் தலா 100 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடிவு.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளை திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரு ஏரிகள் மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்தும் தலா 100 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.