தமிழ்நாடு செய்திகள்
விமான நிலையம் முதல் பல்கலைக்கழகம் வரை பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு
- டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று காலை 10.10 மணியளவில் திருச்சிக்கு வந்தடைந்தார்.
- இந்த ஆண்டின் முதல் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் விமான நிலையத்தின் 2-வது முனையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று காலை 10.10 மணியளவில் திருச்சிக்கு வந்தடைந்தார்.
இதையடுத்து அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு கார் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பிரதமர் மோடியை வரவேற்க சத்ரபதி சிவாஜி, மோடி, சர்தார் படேல் ஆகியோரைப் போல வேடமணிந்து பா.ஜ.க.வினர் வந்தனர்.
இந்த ஆண்டின் முதல் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.