தமிழ்நாடு செய்திகள்
புதியதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை- விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- பயணிகள் நிழற்குடை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி செய்யப்பட்டது.
- மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தின குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி செய்யப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் வினுட் ராய், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தின குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.