சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு காவிரி ரெயில் பாலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
- ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் சார்பில் காவிரி ஆற்றில் உள்ள ரெயில்வே இரும்பு பாலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.