தமிழ்நாடு

ரேசன் கடைகளில் மஞ்சள் பருப்பை வழங்குவதா?-ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2023-12-18 06:04 GMT   |   Update On 2023-12-18 06:04 GMT
  • கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் தி.மு.க. இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
  • தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதலாக உளுத்தம் பருப்பு வழங்கப்படும், சர்க்கரை வழங்கப்படும் என்றெல்லாம் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளாக அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, துவரம் பருப்பிற்கு பதிலாக தரமற்ற, மஞ்சள் பருப்பை அதிக விலைக்கு வாங்கி வழங்க முயற்சித்து வருகிறது. இதன்மூலம் தங்கள் கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் தி.மு.க. இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அரசுக்கு ஏற்படும் இழப்பினைக் கருத்தில் கொண்டும், வெளிப்படையான முறையில், குறைந்த விலையில், தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தரமற்ற மஞ்சள் பருப்பினை வாங்கி வழங்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News