தமிழ்நாடு

நெய்வேலி வியாபாரி கொலைக்கு காரணமான ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்

Published On 2023-10-28 09:09 GMT   |   Update On 2023-10-28 09:11 GMT
  • தமிழ்நாட்டில் ஆங்காங்கே வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
  • காவல்துறை இயக்குனர் தகுந்த நடவடிக்கை எடுத்து ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச்செயலாளர் எஸ். சௌந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில், நெய்வேலியில் பிரியாணி கடை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பகுதியை சேர்ந்த ரவுடிகள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 2 நாட்களுக்கு முன் அதே ரவுடிகள் கண்ணன் கடையை மூடி விட்டு இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் கற்களால் தாக்கி அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆங்காங்கே வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை இயக்குனர் தகுந்த நடவடிக்கை எடுத்து ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News