தமிழ்நாடு செய்திகள்
நாகராஜா கோவில் தை பெருந்திருவிழாவில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- நாகராஜர் கோவில் ஆண்டுதோறும் தை மாதம், தை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- பக்தர்கள் வருகை தந்து திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் என பெயர் வர காரணமாக விளங்கிய நாகராஜர் கோவில் ஆண்டுதோறும் தை மாதம், தை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைப்பெருந்திருவிழாவின் திருகொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வருகை தந்து திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அறக்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ஜோதீஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.