தமிழ்நாடு

சின்னவர் கொடுத்த நிதியை தின்னவர் யார்...?

Published On 2023-12-09 10:59 GMT   |   Update On 2023-12-09 10:59 GMT
  • மாநாடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார்.
  • மாநிலத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளர்களையும் நியமித்தார்.

தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு இன்னும் இரண்டு வாரமே இருக்கிறது. அதற்குள் பேரணிக்குள் நடந்த சில தில்லாலங்கடி வேலைகளை சின்னவர் காதில் சிலர் போட்டு உள்ளதால் கொதிப்படைந்துள்ளார். மாநாடு முடியட்டும் எல்லாம் வச்சுக்கிறேன் என்று கடும் கோபத்தில் இருக்கிறாராம். மாநாடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார்.

இதற்காக மாநிலத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளர்களையும் நியமித்தார். இந்த பேரணிக்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்ட உதயநிதி பேரணி செலவுக்காக பொறுப்பாளர்கள் மூலம் நிதி வழங்கி இருக்கிறார்.

ஆனால் அந்த நிதி கீழ் மட்டம் வரை செல்லவில்லை என்று புகார் அளித்துள்ளார்கள். சின்னவர் கொடுத்த நிதியை தின்னவர் யார்? இதை கண்டு பிடித்து கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் உடன் பிறப்புகளின் கோரிக்கை.

Tags:    

Similar News