தமிழ்நாடு

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கடைசி நேரத்தில் டுவிஸ்ட் வைத்த கல்வி அலுவலர்

Published On 2023-12-07 14:27 GMT   |   Update On 2023-12-07 14:33 GMT
  • கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை.
  • பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான தாலுகாக்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில், சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மழை பாதிப்புகளை தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். கட்டங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உரிய தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கு முன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் புத்தகம், சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News