தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 107 கனஅடியாக குறைந்தது
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட, தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் குறைந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று வினாடிக்கு 176 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 107 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் குறைந்து வருகிறது.
நேற்று 72.94 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 71.96 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 34.40 டி.எம்.சி.யாக உள்ளது.