தமிழ்நாடு செய்திகள்
22 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்தது
- கடந்த 22 நாட்களாக 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை 119. 7 3 அடியாக சரிந்தது.
- இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 5,400 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 5,067 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 12,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.
கடந்த 22 நாட்களாக 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை 119. 7 3 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.