தமிழ்நாடு செய்திகள்
பிள்ளைகளின் படிப்புக்கு பணம் திரட்ட ஆயுள் தண்டனை கைதிக்கு கருணை காட்டிய நீதிமன்றம்
- கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் வாரம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும்.
- சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை.
சென்னை:
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரெயில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் 2021-ம் ஆண்டு செந்தில்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பிள்ளைகளின் படிப்புக்கு பணம் திரட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கணவர் செந்தில் குமாருக்கு விடுப்பு கோரி அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில்குமாருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கியும் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் வாரம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும். மேலும் இந்நாட்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.