தமிழ்நாடு

சித்தோடு அருகே கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு

Published On 2023-07-29 05:27 GMT   |   Update On 2023-07-29 05:27 GMT
  • யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.
  • பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சீனிவாசன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கோழிப்பண்ணையில் ஒவ்வொரு நாளும் கோழி குஞ்சுகள், முட்டைகள் காணாமல் போய் கொண்டிருந்திருக்கிறது. அவரும் அதை கவனிக்கவில்லை. கீரி அல்லது நாய்கள் எடுத்திருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு சட்டை உரித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார். யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது விறகு அடியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறிக்கொண்டு வெளியே வந்தது. அதனை லாபகரமாக மீட்ட யுவராஜ் இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று கூறினார். மேலும் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.

தற்போது குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

Tags:    

Similar News