விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்- வெற்றியை குவிக்கும் இந்திய வீரர்கள்

Published On 2022-07-29 13:16 GMT   |   Update On 2022-07-29 13:43 GMT
  • செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தமிழக இளம கிராண்ட் மாஸ்டர் குகேஷூம் நெற்றி பெற்று அசத்தினார்.
  • ஓபன் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோரும் வெற்றி.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது.

இதில், மூன்று வெவ்வேறு அணிகள் பங்கேற்றன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார்.

இவரது வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பி மகளிர் அணி வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய சி பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஹாங்காவ் அணி வீராங்கனையை 49-வது நகர்த்தலில் ஈஷா கர்வாடே வென்ற நிலையில் பிரதியுஷாவும் வெற்றி பெற்றார்.

மேலும், ஓபன் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தமிழக இளம கிராண்ட் மாஸ்டர் குகேஷூம் நெற்றி பெற்று அசத்தினார்.

இந்திய பி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள கோம்ஸ் மேரி ஆன், திவ்யாச தேஷ்முக் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News