தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்... வானிலை ஆய்வு மையம்
- அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
- டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.
* கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது.
* கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.
* 2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும். தென்மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
* சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* ஜனவரி மாதத்தில் கடலூரில் 130 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.
* புதுச்சேரியில் ஜனவரி மாதத்தில் நேற்று பெய்ததே அதிகபட்ச மழையாகும்.
* அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
*திருவாரூர், நாகையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.