தமிழ்நாடு செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
- வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இன்று காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளை முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தல் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.