தமிழ்நாடு

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2023-07-08 08:36 GMT   |   Update On 2023-07-08 08:36 GMT
  • தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
  • தி.மு.க. அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் இருந்து வாக்கு வாங்குவதற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்தவுடனேயே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாக எதிர்பார்த்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காமல் காலத்தை நீடித்து வந்தது. மேலும் தற்பொழுது ஆலோசனை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் பாகுபாடு, பாரபட்சம், கோட்பாடு என வகுத்து வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். எனவே தி.மு.க. அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News