தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம்

Published On 2022-08-05 12:41 IST   |   Update On 2022-08-05 12:41:00 IST
  • மாமல்லபுரத்திலும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.
  • இலவச அனுமதியால் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

மாமல்லபுரம்:

இந்தியா சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் மத்திய அரசு அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தொல்லியல்துறை சார்பில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை, அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் இன்று(5-ந்தேதி)முதல் வருகிற 15-ந் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்கலாம் என்று அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று முதல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டனர்

மாமல்லபுரத்திலும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெண்ணை உருண்டை பகுதி, கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை உள்ளிட்ட நுழைவு வாயில்களில் இலவச அனுமதி குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்து டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டன.

இன்று காலை மாமல்லபுரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் இலவசமாக அனைத்து புராதன சின்னங்களையும் பார்த்து ரசித்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலவச அனுமதியால் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News