தமிழ்நாடு

பண்டிகை கால விடுமுறை எதிரொலி- சென்னையில் விமான சேவை, கட்டணம் அதிரடி உயர்வு

Published On 2022-12-22 08:08 GMT   |   Update On 2022-12-22 08:08 GMT
  • மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையை ஒட்டி சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பண்டிகை கால விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிகம் செல்லக்கூடும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு 6ஆக இருந்த விமான சேவை தற்போது 8 ஆகவும், கோவைக்கு 16ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூல் செய்யப்படுகிறது.

மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News