தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் ரெயில் முன் பாய்ந்து பெண் வழக்கறிஞர் தற்கொலை
- ஹேமாவதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் ரெயில்முன் பாய்ந்து வழக்கறிஞர் ஹேமாவதி என்பவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஹேமாவதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.