தமிழ்நாடு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை தேறி வருகிறார்- 2 நாளில் வீடு திரும்புவார் என தகவல்

Published On 2023-03-22 03:53 GMT   |   Update On 2023-03-22 09:03 GMT
  • கொரோனா தொற்றில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.
  • உடல் நலம் தேறி வருவதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

சென்னை:

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று பிற்பகலில் திடீரென்று லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது.

இப்போது அவருக்கு உடல் நிலை தேறி விட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கொரோனா தொற்றில் இருந்தும் மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதையடுத்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நாசே ராமச்சந்திரன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.சிவராமன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் நல்ல நிலையில் பேசிக் கொண்டிருந்தார். வெளியே வந்ததும் அவர்கள் கூறியதாவது:-

இளங்கோவன் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தார். அவரது உடல் நலம் தொடர்பாக நேரிலும், தொலைபேசி மூலமும், விசாரித்த காங்கிரஸ் தோழர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அவர் பூரண நலத்துடன் அவருக்கே உரிய பாணியில் விரைவில் எல்லோரையும் சந்திப்பார் என்றனர்.

Tags:    

Similar News