தமிழ்நாடு செய்திகள்
அ.தி.மு.க. தொண்டர்களுடன் இன்று இரவு கலந்துரையாடுகிறார் எடப்பாடி பழனிசாமி
- இன்று இரவு 7.30 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமியுடன் ஆன்லைனில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினர் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 'எக்ஸ்' வலைதளத்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அ.தி.மு.க. ஐ.டி.பிரிவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரடியாக சந்திக்கும் வகையிலும் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆன்லைனில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினர் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.