தமிழ்நாடு

தி.மு.க. அரசு அனைவருடைய அன்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது: வைகோ

Published On 2024-01-08 06:36 GMT   |   Update On 2024-01-08 07:05 GMT
  • பா.ஜ.க. தங்கள் இஷ்டத்துக்கு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
  • போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தமிழக அரசு தீர்வு காணும் என் நம்புகிறேன்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகத்திலே செல்வம் நிறைந்த நாடு நம் நாடு, அதுவும் தமிழ்நாடு மாநிலம் என்ற நிலையை உருவாக்க உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து முதலமைச்சர், விவசாயிகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்குகிறார். தி.மு.க. தலைமையிலான அரசு எல்லோருடைய அன்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நிறையகேடு விளைவிக்கும். இருந்த சட்டங்களை மாற்றி பா.ஜ.க. தங்கள் இஷ்டத்துக்கு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

தமிழக அரசு கொடுத்த நிவாரண தொகை குறைவு. நாங்கள் கொடுத்தது அதிகம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக பதில் அளித்துள்ளார். நாங்கள் கொடுத்தது ஒரு ரூபாய் என்றால் அவர்கள் கொடுத்தது 29 காசு என்று பதில் கூறியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தமிழக அரசு தீர்வு காண்பர்கள் என்று நான் நம்புகிறேன். தமிழக அரசு அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News