தமிழ்நாடு

இந்தியா கூட்டணியில் உள்ள 16 மாணவர் அமைப்புடன் இணைந்து தி.மு.க. மாணவரணி போராட்டம்

Published On 2024-01-10 08:58 GMT   |   Update On 2024-01-10 08:58 GMT
  • தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
  • போராட்டத்தில் மாணவர்கள் திரளாக பங்கேற்குமாறு தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்து உள்ளது.

சென்னை:

காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக போட்டியிட வியூகம் வகுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட 16 மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து யுனைடெட் இந்திய மாணவர் அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பில் தி.மு.க. மாணவரணி இணைந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.

இதில் மாணவர்கள் திரளாக பங்கேற்குமாறு தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்து உள்ளது.

Tags:    

Similar News