தமிழ்நாடு

புதுப்பொலிவுடன் தி.மு.க. இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Update: 2023-06-10 08:32 GMT
  • புதுப்பொலிவூட்டப்பட்ட தி.மு.க. இணைய தளமான DMK.in-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
  • கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச்செய்வோம்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான, மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், புதுப்பொலிவூட்டப்பட்ட தி.மு.க. இணைய தளமான DMK.in-ஐ துவக்கி வைத்தார்.

இந்த இணைய தளத்தினை துவக்கி வைத்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட DMK.in கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்!" என குறிப்பிட்டுள்ளார்.

கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச்செய்வோம்.

Tags:    

Similar News