தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று 80 வயது கல்லூரி ஆசிரியர்கள் உற்சாக சந்திப்பு

Published On 2023-01-28 15:19 IST   |   Update On 2023-01-28 17:55:00 IST
  • சென்னையில் இன்று 80 வயது அரசு கல்லூரி ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
  • 15 அரசு கல்லூரிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற 80 வயது நிறைவடைந்த ஆண், பெண் ஆசிரியர்கள் 150 பேர் கலந்து கொண்டனர்.

சென்னை:

சென்னையில் இன்று 80 வயது அரசு கல்லூரி ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்ற கல்லூரி ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் 80 வயது நிறைவடைந்த ஆசிரியர்கள் உற்சாக சந்திப்பு நிகழ்ச்சி, பாராட்டு விழா சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடந்தது. இதில் சென்னை மாவட்டத்தில் பணிபுரிந்த 15 அரசு கல்லூரிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற 80 வயது நிறைவடைந்த ஆண், பெண் ஆசிரியர்கள் 150 பேர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.அதை தொடர்ந்து ஆசிரியர்கள் குழு புகைப் படம் எடுத்துக் கொண்டனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட ஆசிரியர்கள் உற்சாகமாக ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சிகளை வெளிபடுத்திக் கொண்டனர். ஆண், பெண், கல்லூரி பேராசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்து பழமையான நினைவுகளை பகிர்ந்து ஆரவாரமாக விழாவை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் வெங்கடசாமி தலைமை வகித்தார். கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வர மூர்த்தி செயலாளர் சந்திர சேகரன், சுவாமிநாதன், ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News