தமிழ்நாடு

சேலம் காசிவிஸ்வநாதர் கோவில் சுவரில் போஸ்டர் ஓட்டியவர் மீது வழக்கு

Published On 2023-11-29 05:05 GMT   |   Update On 2023-11-29 05:05 GMT
  • விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

சேலம்:

சேலம் டவுன் 2-வது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

தற்போது இந்த கோவில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கோவில் சுவரில் ஒரு அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் திறந்த வெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News