தமிழ்நாடு செய்திகள்

World-லயே முதல்முறை.. கை மாறி, விரல் மாறி பேண்ட் ஏய்ட்.. வைரலாகும் வீடியோ

Published On 2023-09-29 14:38 IST   |   Update On 2023-09-29 14:38:00 IST
  • முருகாணந்தம் அண்ணாமலையின் கை விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார்.
  • அண்ணாமலையின் இடது கை ஆள்காட்டி விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார்.

பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் வால்பாறையில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். அப்போது வாகனத்தில் ஏறும் போது அண்ணாமலையின் வலது கை, கட்டை விரலில் அடிப்பட்டது.

வாகனத்தில் ஏறிய பிறகு, கட்டை விரலை உதறிய படி மைக் பிடித்து பேச ஆரம்பித்தார். கை விரலில் அடிப்பட்டதை அடுத்து, பா.ஜ.க. பொதுச் செயலாளர் முருகாணந்தம் கட்சி தொண்டர்களிடம் பேண்ட் ஏய்ட் வாங்கி வரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் தொண்டர்கள் பேண்ட் ஏய்ட் வாங்கிவந்தனர்.

இதனிடையே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடையே உரையாற்ற துவங்கி விட்டார். இருந்த போதிலும், உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, முருகாணந்தம் அண்ணாமலையின் கை விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார்.

ஆனால், இங்கு தான் டுவிஸ்ட் காத்திருந்தது. அண்ணாமலையின் வலது கை கட்டை விரலில் அடிப்பட்ட நிலையில், முருகாணந்தம் பதட்டத்தில் அண்ணாமலையின் இடது கை ஆள்காட்டி விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார். இதற்கு அண்ணாமலை எதுவும் சொல்லாமல் அப்படியே இருந்தார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News