தமிழ்நாடு

அ.தி.மு.க.வில் யாரையும் ஓரம் கட்டவில்லை- பா.வளர்மதி பேட்டி

Published On 2022-06-22 07:33 GMT   |   Update On 2022-06-22 07:33 GMT
  • எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் ஜனநாயக முறையில் பொதுக்குழுவை அமைதியாக நடந்து முடிந்து இருக்கிறது.
  • பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதியான முறையில் நடத்திக் காட்டுவார்கள்.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.வளர்மதி கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் அராஜகம் ஏதும் நடைபெறவில்லை. அராஜகம் என்றால் என்ன அர்த்தம் என்று புரிய வில்லை. தொண்டர்கள் அவர்களாகவே தலைவர்களின் வீடுகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அராஜகம் என்றால் என்னது. அர்த்தம் என்று புரியவில்லை. தொண்டர்கள் அவர்களாகவே தலைவர்களின் வீடுகளுக்கு வருகிறார்கள். அவர்களது ஆதரவை தெரிவித்து விட்டு செல்கிறார்கள்.

ஒற்றை தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. எனவே, பொதுக்குழுவை கூட்ட வேண்டும். சிறப்பான முறையில்பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று தங்களின் ஆர்வத்தை தொண்டர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது எப்படி அராஜகம் ஆகும் என்று எனக்கு தெரியவில்லை.

அடாவடித்தனம் அராஜகம் என்பது வேறு, அமைதியான முறையில் ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு. 1972-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது இது போன்ற மிகப்பெரிய எழுச்சியை என்னை போன்றவர்கள் பார்த்து இருக்கிறோம். அதே போல் இப்போதும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகமாக கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் ஜனநாயக முறையில் பொதுக்குழுவை அமைதியாக நடந்து முடிந்து இருக்கிறது. அதேபோல் இப்போதும் பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதியான முறையில் நடத்திக் காட்டுவார்கள்.

அ.தி.மு.க.வில் அராஜகம் நடைபெறவும் இல்லை. அ.தி.மு.க.வில் நாங்கள் யாரையும் ஓரம் கட்டவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News