தமிழ்நாடு செய்திகள்

மாணவியின் உடலை கொண்டு சென்றபோது விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்

Published On 2022-07-23 08:38 IST   |   Update On 2022-07-23 09:05:00 IST
  • திருச்சி பைபாஸ் சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் மாணவியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சிறிய விபத்துக்குள்ளானது.
  • பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, திருச்சி பைபாஸ் சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் மாணவியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சிறிய விபத்துக்குள்ளானது. ஆம்புலன்ஸ் மற்றும் அதன் துணை வாகனம் இரண்டும் கன்டெய்னர் லாரியுடன் மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதிய சேதமடைந்தது.

பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

Tags:    

Similar News