தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை- அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்தது

Published On 2023-07-10 14:53 IST   |   Update On 2023-07-10 14:53:00 IST
  • டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
  • கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் அண்மையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்குவது, கட்டுப்பாட்டு அறை அமைத்து கடைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது, கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News