தமிழ்நாடு

கணியம்பாடி அருகே காரில் வந்த கும்பலிடம் 9 நாட்டு துப்பாக்கி பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2023-06-10 06:01 GMT   |   Update On 2023-06-10 06:01 GMT
  • வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர்:

வேலூர் வனச்சரகம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

நேற்று இரவு ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் காரில் சென்று உள்ளதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்த 3 மர்ம நபர்கள் வனத்துறையினரை கண்டதும் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் சாரணா குப்பத்தை சேர்ந்த கணேசன் மகன் சுதாகர் (வயது 22) என்பதும் , தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (29) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பிய ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News