தமிழ்நாடு செய்திகள்
பா.ஜ.க.-வில் சேர தயாராகும் 5 தமிழக எம்.எல்.ஏ.-க்கள்
- பா.ஜனதாவில் இணைய சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
- ஒவ்வொருவரும் அதிருப்தி உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார்.
இதையடுத்து தனது பதவியையும் ராஜினமா செய்தார். இப்போது விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயதாரணியை தொடர்ந்து காங்கிரசில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி கட்சிகளை சேர்ந்த இவர்கள் ஒவ்வொருவரும் அதிருப்தி உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
அவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. அவர்களும் பா.ஜனதாவில் இணைய சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
அவற்றை பா.ஜனதாவும் ஏற்றுக்கொண்டதால் விரைவில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.